புத்தாண்டு வாழ்த்துக்கள். 2023 கவிஞர் இரா .இரவி.

புத்தாண்டு வாழ்த்துக்கள். 2023 கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் ! வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் ! முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் ! மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும் ! சாதி மத சண்டைகள் இல்லாத ஆண்டாகட்டும் ! சகோதர உணர்வுப் பெருகும் ஆண்டாகட்டும் ! படைப்பாளிகளுக்குப் புகழ் மிக்க ஆண்டாகட்டும் ! பண்பாளர்களைப் போற்றும் ஆண்டாகட்டும் ! ஊழல் எங்கும் எதிலும் இல்லாத ஆண்டாகட்டும் ! ஊழல்வாதிகள் மனம் திருந்தும் ஆண்டாகட்டும் ! அரசியல்வாதிகள் திருந்தி வாழும் ஆண்டாகட்டும் ! அரசியலில் தூய்மை வாய்மை நிலவும் ஆண்டாகட்டும் ! அறவழி நடப்போருக்கு நன்மை கிட்டும் ஆண்டாகட்டும் ! தீயோருக்குத் திருந்தும் வாய்ப்பு கிட்டும் ஆண்டாகட்டும் ! வன்முறை இன்றிஅமைதி நிலவும் ஆண்டாகட்டும் ! நன்முறையில் மக்கள் நடக்கும் ஆண்டாகட்டும் ! மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியும் ஆண்டாகட்டும் ! மூளையை பகுத்தறிவிற்குப் பயன்படுத்தும் ஆண்டாகட்டும் மனிதநேயம் எங்கும் மலரும் ஆண்டாகட்டும் ! மதவெறி எங்கும் அழியும் ஆண்டாகட்டும் ! ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை ஆண்டாகட்டும் ! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஆண்டாகட்டும் ! மனிதனை மனிதன் மதித்து நடக்கும் ஆண்டாகட்டும் ! மனதர்கள் யாவரும் மகிழ்ந்து இருக்கும் ஆண்டாகட்டும் ! நல்லதை மட்டும் கேட்கும் பார்க்கும் படிக்கும் ஆண்டாகட்டும் ! தீயவை எங்கும் எதிலும் நிகழாத நல்ல ஆண்டாகட்டும் ! https://tamil.pratilipi.com/user/k0xy3pxv2k...

கருத்துகள்