அம்மா அப்பா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம்: கவிதாயினி திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 17.
பக்கம் : 94 விலை : 9௦
044 24342810
நூலாசிரியரின் 27ஆவது நூல் இது நாம்இவ் உலகில் வாழ காரணமான
அம்மா, அப்பாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் நூல். இந்நூலுக்கு கவிதை
உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும்
கலைமாமனி முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகிய இருவரும் தம் சிறப்பான
அணிந்துரை அளித்து நூலுக்கு மேலும் அழகூட்டுகின்றனர்.
நூலாசிரியர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணியாற்றி
விருப்பஓய்வு பெற்றவர். மதுரையின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர். தம்
படைப்பாற்றல் மூலம் இணைய வழி உலகம் முழுவதும் வாசகர்களை பெற்றவர்.
இவரின் 27-ஆவது நூல் இது. இனி நூலிற்குள் செல்வோம்.
இவ்உலகிற்கு நாம் வரக்காரணமான தாய் பற்றி நூல்,
‘‘தன் தூக்கம் மறந்து பெற்ற
தன் சேயின் தூக்கம் காத்தவள்’’ – தாய்
திருநங்கைகளை நம்மில் ஒருவராய் பார்க்க வேண்டுமென நூல்,
‘‘கேலியாகப் பேசாதீர்கள்
தோழியாகப் பாருங்கள் திருநங்கைகள்’’
உயிர்காக்கும் தானங்களில் சிறந்த தானமான இரத்த தானம் பற்றி நூல்.
‘‘தானத்தில் சிறந்த்து ரத்த தானம்
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம்.’’
மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வானம் குறித்து நூல்.
‘‘உயிர் பறவைகள் உலோகப் பறவைகள்
உலவிடும் வானம்!
உற்று நோக்குவோரின் உள்ளம்
கொள்ளையிடும் வானம்!
இவ்உலகில் நாம் பிறந்த்து முதல் நமக்காக உழைத்து தேய்ந்தவர் அப்பா.
‘‘திறமைகளை பயிற்றுவித்த ஆசான் நீங்கள்
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்!
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்!’’
எளிமையின் சிகரமாக வாழ்ந்து கொள்கை இலட்சியத்துடன் மறைந்த நமது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்து நூல்.
‘‘மாமனிதர் அப்துல் கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர்!
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார்!
விண்ணில் உள்ள எவுகணைகளில் அவர் வாழ்கிறார்!’’
மொத்தத்தில் நூல் முழுவதும் தாய்தந்தையரின் அன்பும் ஆதரவும் நூல்ஆசிரியராம்
எடுத்துரைக்கப்பட்ட இனியநூல்!
கருத்துகள்
கருத்துரையிடுக