படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. குடும்பம் *வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?* *1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.* *சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.* *அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,* *கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.* *அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.* *சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.* *சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.* *சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.* *1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.* *2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.* *அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.* *அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;* *ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;* *19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.* *6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.* *இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.* *அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,* *இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.* *67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,* *74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.* *வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.* *சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,* *திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.* *அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.* *குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.* *வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.* *ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.* *சேமிப்பும் குறைகிறது.* *எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.* *உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.* *ஆதலால் தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,* *(கிளப்பு கடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.* *ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...",* *Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,* *மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,* *இது ஒரு பேராபத்து...* *நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்...* *முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,* *யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால் வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.* *அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.* *காலையில் எறும்புக்கும்,* *பகலில் காக்கைக்கும்,* *இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.* *குடும்பமாய் இருங்கள்.* *ஒற்றுமையாய் வாழுங்கள்...* *படித்ததில் பிடித்தது...

கருத்துகள்