படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. இன்று நம் வளர்ச்சிக்கு வித்திட்ட *நீதிக்கட்சி* துவங்கியநாள்(20.11.1916).கொண்டாடுவோம்.👍 சென்னை வேப்பேரியில் வழக்கறிஞர் டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் திவான் பகதூர் பிட்டி.தியாகராய செட்டியார்,டாக்டர்.தரவாடு மாதவன் நாயர்,டாக்டர்.சி.நடேச முதலியார்...உள்ளிட்ட நம் முன்னோர்களால் பார்ப்பனரல்லாதோர் நலன் காக்க தொடங்கப்பட்டது.👏 அதற்கு காரணம் மக்கள்தொகையில் 3% இருக்கும் பார்ப்பனர்கள் கல்வி&வேலை வாய்ப்பில் முழுவதும் ஆக்கிரமித்திருந்ததே!😡 இன்றைய திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக்கட்சி, *தென்னிந்திய நலவுரிமை சங்கம்* என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டது.கட்சியின் இதழான *நீதி(Justice)* என்பதே பெயராகிவிட்டது.😂 1920ல் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா,ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தது.👍 *நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள்:* 1)இன்றைய இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை 16.09.1921ல் கொண்டுவந்தது. 2)1920ல் ஆண்&பெண் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்விச்சட்டம்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் தண்டனை. 3)1920ல் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம். 4)1923ல் சென்னைப்பல்கலைக்கழகச்சட்டம் திருத்தப்பட்டு,பார்ப்பனர் மட்டும் பங்கேற்ற நிலை மாற்றி நிருவாகக்குழுவில் பார்ப்பனரல்லாதோர் இடம்பெற்றனர். 5)1926ல் ஆந்திரப்பல்கலைக்கழகமும்,1929ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டது. 6)1922ல் பஞ்சமர்&பறையர் போன்ற சொற்களை நீக்கி *ஆதி திராவிடர்* என்ற பெயரை பயன்படுத்த சட்டம். 7)பெண்கள் வாக்களிக்கவும்,சட்டமன்ற உறுப்பினராவதையும் தடை செய்த இந்திய அரசு சட்டத்தை உடைத்து 01.04.1921ல் பெண்கள் வாக்களிக்கவும்,சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டம். 8)1925ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றி கோயில்கள் மாகாண அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 9)1935ல் தொழிற்சாலை தொடங்க கடனுதவி அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிச்சட்டம். 10)குத்தகைக்காரர்களின் உரிமை காக்க 1931ல் மலபார் குத்தகைச்சட்டம். வட இந்தியாவைவிட பலமடங்கு தென்னிந்தியா வளர்ந்துள்ளதற்கு நீதிக்கட்சி ஆட்சியின் திட்டங்களே காரணம் என்பதை உணர்ந்து கொண்டாடுவோம் நீதிக்கட்சி பிறந்த நாளை

கருத்துகள்