படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தினம் ஒரு புத்தகம் *முதல் தலைமுறை* *வெ இறையன்பு.* அமுதம் புக் ஷாப் வாசிக்கும் போதே சிலிர்க்கிறது. வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து வாழ்வியல் வரை கடந்து வந்த பாதையினை, அனுபவங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அழகாக பகிர்ந்து கொள்கிறார் நூலிலிருந்து *விழிக்கிறபோதே அன்றைய பொழுது விடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பொழுது விடிகிறது!* *சிலர் சூரியனையே எழுப்புகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். பலரை சூரியன் எழுப்புகிறான்!* *எப்போது எழுகிறோம் என்றும் எப்போது படுக்கையில் விழுகிறோம் என்பதையும் சேர்த்து தான்...* *ஒரு நாளின் நீளம் தீர்மானிக்க படுகின்றன. அதிகாலையில் விழிப்பவர்கள் அதிக நாட்கள் வாழுகிறார்கள்!* *ஒவ்வொரு நாளும் உதயம் அதிசயம் என்பது அதிகாலையில் விழிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்!* *உயிர்கள் அனைத்துமே விடியலை வரவேற்கின்றன... அரும்புகள் மலர்ந்தும், பறவைகள் பாடியும், வண்டுகள் வாழ்த்தியும் விடியலை பூபாளத்துடன் வரவேற்கின்றன.* *அனைவருக்கும் வாழ்வதற்கான வழி இப்பூவுலகில் உண்டு. அதை நாம் தான் தேடிக் கண்டு கொள்ள வேண்டும் என்பதை பள்ளி பருவத்திலேயே உணர்ந்து கொண்டேன்* *ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு அவமானமும் பலவீனம் தான்!* *இவை பலரையும் சிதைக்கின்றன! வெகு சிலரை மட்டுமே செதுக்குகிறது!* *தோல்வியையும் துயரத்தையும் சிறந்த உரமாக, உறவுகளாக மாற்றி கொள்பவர்களே சிறப்படைகிறார்கள்.* *என்னுடன் படிக்கும் போதே வறுமை துரத்த பிழைப்புக்காக ஓடியவர்கள் பலர்.* *அந்தச் சூழல் என்னை நிறையவே யோசிக்க வைத்தது. எந்த சூழலிலும் வெற்றி பெற போராட வேண்டும் என்கிற பொறி தீயாய் சுழன்றது!* *சின்ன வயதில் நான் கண்ட ஏழ்மையின் கொடூரங்கள் என்னை மிகவும் பாதித்தது!* *அவைதான் சமூகம் சார்ந்த அக்கறையை என்னுள் ஆழமாக விதைத்தது!* *சுயநலம் பற்றி சிந்திக்காமல் பொதுநலன் கருதி செயல்படும் போதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம்!* *வெற்றி என்பது நம் மீது மற்றவர்கள் எறிந்த கற்களால் நாம் கட்டுகிற கோபுரம் என்பதை மறந்து விடாதீர்கள்!* *இன்றைய இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்!* *நியாயமான வழியில் தேடுவதை நிறுத்தி விடாதீர்கள்* *குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளை காட்டிலும் மிக நீளமானவை, ஆழமானவை* *அடுத்தவர்கள் நலனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனை தான்.* *ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வுடன் அணுகினால் வாழ்வே ஒரு வழிபாடு தான்!* *வாழ்வை நேசிப்பவர்கள்* *அனைவரும்* *அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மறவாதீர்கள்!* *விழித்திருக்கும் போதெல்லாம் வாசித்துக் கொண்டிருப்போம்!* *வாசிக்கும் தலைமுறைகளை இனியாவது வார்த்தெடுப்போம்!* தோழமையுடன் சீனி. சந்திரசேகரன்

கருத்துகள்