படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

ஜோதிடத்தை விரும்புவது பலவீனமான மனத்தின் அறிகுறி என்பார் சுவாமி விவேகானந்தர். ஒரு ஜோதிடர் அரசனிடம் சென்று,'இன்னும் ஆறு மாதத்தில் இறந்துவிடுவீர்கள் 'என்றார்.நடுங்கிய அரசர் ,அப்போதே உயிரை விட்டுவிடுவார் போலிருந்தது.ஜோதிடர்கள் எல்லாம் அறிவிலிகள் என மந்திரி கூறியபோதும் அரசர் நம்பவில்லை. இதை நிரூபிக்க அந்த ஜோதிடரை மந்திரி மீண்டும் அழைத்தார்.'நீங்கள் போட்ட கணக்கு சரிதானா'எனக் கேட்க அதில் தவறு இருக்காது என்றார். "உங்களுக்கு எப்போது மரணம் வரும்"என மந்திரி ஜோதிடரைக் கேட்டார்."பன்னிரண்டு ஆண்டுகளில்"எனப் பதிலுரைத்தார். அப்போதே மந்திரி சோதிடரின் கழுத்தை வெட்டி வீழ்த்தினார்.அவர் இறந்தார். மன்னரைப் பார்த்து,'இந்தச் சோதிடன் பொய்யன் என்பது இப்போதாவது புரிகிறதா'என்றார். (விவேகானந்தரின் 'எழுமின் விழிமின் 'என்ற புத்தகத்திலிருந்து) A.J.SORNARAJ

கருத்துகள்