படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தினம் ஒரு புத்தகம் நூல்: மென்காற்றில் விளை சுகமே வெ.இறையன்பு பதிப்பகம்: NCBH நல்ல கருத்துக் கருவூலமாய் விளங்கும் நூல். நூலிலிருந்து ஒருவர் போலச் செய்வது மிகவும் அபத்தமானது. இயற்கை ஒரு போதும் போலச் செய்வது இல்லை. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறான். அவன் வேறொருவன் போல் இருக்க முயல்வது இயற்கையை மறுதலிப்பதற்குச் சமமாகும். முள்ளெலிகளின் பிறப்பு மனிதனின் பிறப்பு ஒப்புமை நன்று. உலகத்தில் மாற்றமில்லாதது மாற்றம் ஒன்றுதான். தலைமை என்பது தழும்புகளைத் தாங்குவது. மகுடங்களை அணிந்து கொள்வது அல்ல. நமக்குள் இருக்கும் சுரங்கங்கள் அற்புதமானவை. அவற்றை அன்பெனும் விளக்கு கொண்டு, கனிவென்னும் கைச்சுடர் கொண்டு. பணிவென்னும் பார்வை கொண்டு தேடினால் அவை புலப்படும். நம் வாழ்வு திடப்படும். நேசிப்பவர்கள் மீது மகரந்தம் மட்டுமல்ல, தேனே தெளிக்கப் படுகிறது. இதழ்கள் அல்ல , வாசனைத் திரவமே தெளிக்கப் படுகிறது. தோழமையுடன் சீனி. சந்திரசேகரன்

கருத்துகள்