படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

#ஜெயிலர்:நாளை உனக்கு தூக்கு தண்டனை. இறுதி வாழ்நாளில் உன் கடைசி ஆசை என்ன? #பகத்சிங்:ரொட்டி சாப்பிடனும்போல் ஆசையாக இருக்கிறது. #ஜெயிலர்:அப்படியே ஆகட்டும் ஏற்பாடு செய்கிறேன். #பகத்சிங்:ஒரேயொரு நிபந்தனை நான் "பேபி அம்மா" கையால்தான் ரொட்டி சாப்பிட விரும்புகிறேன். #ஜெயிலர்:போயும்போயும் "பேபி அம்மா" கையாலையா? சரி, உன் விருப்பப்படியே ஏற்பாடு செய்கிறேன். #பேபி அம்மா: ஜெயிலில் உள்ள மனித மலங்களை அள்ளிஅள்ளி என் இரண்டு கைரேகைகளுமே தேய்ந்துபோயிற்று என் கையாலையா "மகனே" நீ ரொட்டி திங்க ஆசைப்படுகிறாய். கண்ணீர் வழிய இரண்டு கைகளாலும் நாளை தூக்கிலிடப்படப்போகும் சீக்கிய மகனுக்கு ரொட்டி ஊட்டி விட்டார் பேபி அம்மா. அந்த வாய்ப்பை கொடுத்த மாவீரன் பகத்சிங்

கருத்துகள்