1.கல்லால் செதுக்கியவற்றைவிட சொல்லால் செதுக்கியவை அதிக காலம் நீடித்திருக்கின்றன. 'எதுவும் நிரந்தரமல்ல' என்பதை நமக்கு இயற்கையே நினைவுறுத்துகிறது.
2.ஒரே ஆண்டில் பூத்துக்காயும் செடிகளும் மறைகின்றன. பல்லாண்டு வாழும் மரமல்லிகைகளும் மடிகின்றன. எதுவும் நிரந்தரமல்ல.
3. உண்மையில் அழியாத அதிசயம் இயற்கைதான்.அது அழியும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் உருவாகும் உன்னதம்கொண்ட அதிசயம்.
4.மலையின் உயரத்தைக் கணக்கிடலாம். ஆனால் அதில் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் உணர முடியாது.ஏனென்றால் தினம் தினம் புதிதுபுதிதாய்
அதிசயங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
---- முனைவர்.இறையன்பு அவர்கள்,
----- " தெரிந்ததும் தெரியாததும் " என்ற" நூலில் ,
----' இயற்கை' எனும் தலைப்பில்.
கருத்துகள்
கருத்துரையிடுக