படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. உங்களுடைய குழந்தைகளை ரசியுங்கள்! அவர்களுடைய எல்லா செயல்களையும் ஆதரித்து புரிய வையுங்கள். ஒரு பொருளை உடைத்து விட்டால் ஓங்கி முதுகில் அடிப்பது பெரும்பாலான அம்மாக்களின் செய்கையாக இருக்கிறது. உடைத்த பொருளுக்காக குழந்தை ஏற்கனவே பயந்து பதட்டத்தில் இருக்கின்ற போது உங்களுடைய அடி அவனை (ளை) இன்னும் பின்னோக்கிய பதட்டத்திற்கே அழைத்துச் செல்லும். பொருட்களை உடைக்கின்ற அல்லது ஏதாவது செய்கின்றபோது அவர்களின் பதட்டத்தை தணிக்கின்ற பணியை செய்யுங்கள். முதலில் பதட்டடத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அரவணையுங்கள் ஆறுதல் சொல்லுங்கள். பிறகு இனி அந்தப் பொருளின் மகிமை சொல்லி., இனி அந்தப் பொருளை அல்லது அது போலப் பொருளை கையாளும் போது கவனமாக கையாளும் முறைகளை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அடித்தாலும் அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வதில்லை. அடித்த அம்மாவை நோக்கியே அடிவாங்கிய குழந்தை ஆறுதல் கிடைக்கும் நோக்கில் செல்கிறது. குழந்தைகள் இறைவன் வழங்கிய அற்புத அமானிதங்கள்!" குழந்தைகளை கொண்டாடுங்கள்!" கொண்டாடும் முறையில்!!!"

கருத்துகள்