வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு
கவிஞர் இரா.இரவி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்டை
ஓதியது ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகக் கூறியது
உனக்கு தீங்குசெய்த பகைவனும் வெட்கும்வண்ணம்
அவனுக்கு நன்மை செய்யச்சொன்னது திருக்குறள்
மதுவைத் தொடாதே மடையனாக மாறாதே
மதுவிலக்கை அன்றே பாடிய அரிய நூல் திருக்குறள்
உயிர்களைக் கொல்லாதே உயிர்கள் யாவும்
உன்னை கையெடுத்து வணங்கும் - சொல்லியது திருக்குறள்
பெற்ற உதவி சிறிதானாலும் மறக்காதே என்றும்
செய்த உதவி பெரிதானாலும் மறந்திடு – திருக்குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிவகை
வழங்கிய உயர்ந்த நன்மறை – நம் திருக்குறள்
கல்வியை கசடுகள் அற்றுக்கற்று அதன்வழி
கற்றவழியே வாழ்வில் நடக்க உரைத்தது – திருக்குறள்
உலக மனிதர் யாவரும் சமம் என்று அன்றே
ஓங்கி உரைத்த ஒப்பற்ற உயர்மறை – திருக்குறள்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லவே இல்லை
உரக்க உரைத்த உயர்ந்த மாபெரும் திருக்குறள்
சாதிமத வேறுபாடுகள் யாரிடமும் பார்க்காதே
சகோதர உணர்வுடன் பழகிடச் சொன்ன திருக்குறள்
மனிதநேயத்தை உலகிற்கு கற்பித்தது திருக்குறள்
மனிதனை மனிதன் மதிக்க வைத்தது திருக்குறள்
தேசப்பிதா காந்தியடிகள் போற்றியது திருக்குறள்
தேசமே போற்றி மகிழ்ந்திடும் திவ்யமான திருக்குறள்
கருத்துகள்
கருத்துரையிடுக