.முது முனைவர் இறையன்பு, " உன்னோடு ஒரு நிமிஷம்" எனும் நூலில்.

* புத்தியைத் தொடர்ந்து செம்மையாக்குவது படிப்பினாலும் சிந்தையாலும் பிரச்சினையின் மையத்திலேயே எல்லாப் புலன்களையும் ஒரு சேரக் குவிப்பதே உச்சபட்ச விழிப்புணர்வு ! ** அதிக ஊதியம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே நாம் பணியையும் படிப்பையும் தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி மணல் கோட்டையாக மாறிவிடும் . *** எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் ;எவ்வளவு நேரத்தில் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்கிற சூட்சுமம்தான் நேர மேலாண்மை ! **** செய்கிற பணியிலேயே முழுமையாகத் திளைத்திருப்பவர்கள் மூன்று நிமிடங்களில் முடிய வேண்டியதை முக்கால் நிமிடத்தில் செய்து விடுவார்கள் . ***** நொடிகளை வீணடிப்பவர்கள் நொடிந்து போவார்கள் ! அவற்றைப் பயன்படுத்துபவர்கள் கோடீஸ்வரர்களாக ஆவார்கள் ! ---முது முனைவர் .இறையன்பு, " உன்னோடு ஒரு நிமிஷம்" எனும் நூலில்.

கருத்துகள்