படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. பனைமரத்தின் கொடை . உன் நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்வார்கள். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் . நல்ல மனைவியைப் போல நல்ல நண்பன் கிடைப்பதும் நமக்கு கிடைத்த பொக்கிஷம். தாய், தந்தையை விட நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. நண்பர்களைப் பற்றி கவியரசு கண்ணாதாசன் இப்படிச் சொல்கிறார்.. பனைமரம். தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரைக் குடித்து தன் உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன். தென்னைமரம். தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன் வாழைமரம். தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன் தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூவரில் பனைமரம் போன்றவனைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டுமாம். நல்ல நட்பு எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்ப்பது இல்லை. பழம்பெரும் தத்துவ ஞானி செனக்கா சொல்கிறார். "வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய சுகங்களிலேயே, உறுதியான, மென்மையான நட்பைப்போல் சிறந்தது ஏதுமில்லை. அது நமது கவலைகளை இனிமையாக ்குகின்றது. துயரங்களைப் போக்கி விடுகின்றது. நல்ல நட்பு மரணத்தைக் கண்டும் பயப்படாத நிலையினைக் கொடுக்கும் என்கிறார். உண்மையான நண்பர்களைக் கொண்டவர்கள் இன்றைய உலகத்தில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

கருத்துகள்