கலைவாணர் ! கவிஞர் இரா. இரவி !

கலைவாணர் ! கவிஞர் இரா. இரவி ! நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் ! வாரி வாரி வழங்குவதில் கலைவாணர் வள்ளல் பாரி ஓரி வரிசையில் நின்றவர் ! கர்ணனுக்கு இணையான வள்ளல் கலைவாணர் கஞ்சத்தனம் என்னவென்று வாழ்வில் அறியாதவர் ! எதுவும் பணம் இல்லாத நேரத்திலும் ஏழைக்கு வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் தந்தவர் ! நாட்டிய பேரொளி பத்மினி நடிகையை நாடு போற்றிட அறிமுகம் செய்தவர் ! உடுமலை நாராயணக் கவி அவர்கள் உலகம் அறிந்திடம் காரணம் ஆனவர் ! நாடகங்களில் சோடா விற்று வந்தவர் நாடறிந்த நகைச்சுவைக் கலைஞராக உயர்ந்தவர் ! வில்லுப்பாட்டில் கலைப்பயணம் தொடங்கியவர் விண்ணை முட்டும் புகழினைப் பெற்றவர் ! சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் சிரிப்பின் வகைகளைப் பாட்டால் உணர்த்தியவர் ! காந்தியடிகளை நேசித்தவர் சொந்தப் பணத்தில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பிய இனியவர் ! பகுத்தறிவுக் கருத்துக்களை வசனங்களில் விதைத்தவர் பார்போற்றும் நகைச்சுவைக் கலைஞராக உயர்ந்தவர் ! நகைச்சுவை வசனங்கள் சொந்தமாக எழுதியவர் நகைச்சுவையை ரசிக்கும்படி தரமாக வழங்கியவர் ! நாகர்கோவில் ஒழுகினசேரி எனும் கிராமத்திற்கு நாடறிந்த புகழைத் தேடித் தந்தவர் கலைவாணர் ! . உடலால் உலகை விட்டு மறைந்தாலும் உன்னத நகைச்சுவையால் வாழ்கிறார் இன்றும் !

கருத்துகள்