மாபெரும் தமிழ் அறிஞர் விடுதலைப் போராளி தமிழ்ச் சமைய ஞானி தமிழ்த் தென்றல் திரு வி.கலியான சுந்தரனாரின் பிறந்தநாள் இன்று.

மாபெரும் தமிழ் அறிஞர் விடுதலைப் போராளி தமிழ்ச் சமைய ஞானி தமிழ்த் தென்றல் திரு வி.கலியான சுந்தரனாரின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் தமிழறிஞர் அரசியல் போராளி இலக்கியத் தென்றல் ஒழுக்க சீலர்... தமிழர்கள் பின்பற்றி வாழ வேண்டிய தகுதி உள்ள பெரு மாந்தர் திரு வி க அவர்கள். தமிழ் சமயங்கள் குறித்து ஏராளமான நூல்கள் எழுதிய மாமனிதர். அதே வேளையில் அவர் பொதுவுடமை சித்தாந்த சிந்தனையாளராகவும் விளங்கினார். உழைக்கும் மக்கள் மீது மிகப் பெரும் பற்று கொண்டு தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தியவர். நாட்டு விடுதலைக்காக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு தமிழாசிரியர் வேலையை துறந்தார். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த மிகப்பெரும் மனிதர்களை ஒன்றிணைத்து தொழிலாளர் போராட்டத்திற்கு பாடுபட்டவர். இவருடைய காலத்தில் தான் வ உ சி அவர்களும் சுப்பிரமணிய சிவா அவர்களும் இன்னும் பல பெரியோர்களும் இணைந்து இயங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரோல் இயக்கத்திலும் செயலாற்றியவர். தெள்ளு தமிழில் பேசக்கூடிய எழுதக்கூடிய ஆற்றல் படைத்தவர் . பெண்ணின் பெருமை என்ற நூலை வழங்கியவர். முருகன் அருள் வேட்டல்,. திருமால் அருள் வேட்டல் சிவன் அருள் வேட்டல் பொதுமை வேட்டல் என்ற வடிவில் இறை சார்ந்த நூல்களை வழங்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வரலாற்றுத் தடம் பதித்து மாபெரும் சமய ஞானியாகவும் அரசியல் போராளியாகவும் தமிழ் அறிஞராகவும் விளங்கிய திரு வி க அவர்களுடைய பிறந்தநாளில் அவரது மாபெரும் பணிகளை நினைவுகூர்ந்து அவர் வழியைப் பின்பற்றி சிறப்படைவோம்.

கருத்துகள்