நூல் இன்று புதிதாய்ப் பிறந்தோம். ஆசிரியர் ; முது முனைவர் வெ.இறையன்பு.

நூல் இன்று புதிதாய்ப் பிறந்தோம். ஆசிரியர் ; முது முனைவர் வெ.இறையன்பு. முதற்பதிப்பு;ஜூன் 2020,--------------------------------------------------------------------------------* விலங்குகள் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்கின்றன . ** இழந்தவர்களை எண்ணி இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதர்களுக்கான குறைபாடு . *** இந்த நொடியில் வாழ்வது என்பது மகத்தான சாதனை.அது கின்னஸ் புத்தகங்களில் இடம்பெறுகிற அத்தனை சாதனைகளைக் காட்டிலும் உயர்ந்தது. **** மனமும் ,உடலும் ,ஆன்மாவும் ஒரே புள்ளியில் இணையும்போதுதான் இந்த நொடியில் வாழ்வது சாத்தியமாகும் .அதற்கு நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் .செய்கிற பணியில் கரைத்துபோக வேண்டும். ***** ஒவ்வொரு நொடியாகத்தான் நேரம் கட்டமைக்கப்படுகிறது.இந்த நொடியை விழிப்புணர்வோடு வாழ்கிறவர்கள்தாம் நேரத்தின் உன்னதத்தை உணர்ந்தவர்களாக இருக்க முடியும் .

கருத்துகள்