அல் அய்ன் நகரில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுகம்

அல் அய்ன் நகரில் மதுரைக் கவிஞரின் நூல் அறிமுகம் அல் அய்ன் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். இந்த நகரில் உள்ள அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரில் மதுரைக் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘தீண்டாதே தீயவை’ என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி நடந் தது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர் ஏ. முஹம்மது மஃஹ்ரூப் ‘தீண்டாதே தீயவை’ நூலை அறிமுகம் செய்து வெளியிட அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ஏ. முஹம்மது மஃஹ்ரூப், தீண்டாதே தீயவை என்ற நூலில் அமைந்துள்ள பெரும்பாலான கவிதைகள் மது எதிர்ப்பு, தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து அமைந்துள்ளது. இவை நபிகள் நாயகம் (ஸல்) போதித்தவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார். இந்த நூலை அனைவரும் வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என்றார். இந் த நிகழ்ச்சியில் மறைந் த பிரபல பாடகர் இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் மகன் நாகூர் இ.எம். ஹனிபா நௌஷாத் அலி, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஷேக் ஃபரீத், சென்னை இப்ராஹி, திட்டச்சேரி இக்பால், பைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீண்டாதே தீயவை ! நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி ! வானதி பதிப்பகம்.23.தீனதயாளு தெரு,தியாகராயர் நகர்,சென்னை.6000017.பக்கங்கள் 60.விலை ரூபாய் 50.பேச 044.24342810

கருத்துகள்