உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி ! தானத்தில் சிறந்தது ரத்த தானம் ! தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் ! குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் ! விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி ! விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் ! பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி ! பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி ! நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி ! நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி ! ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் ! ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் ! ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல ! ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல ! பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் ! குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் ! பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் ! பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு ! இறைக்கும் கிணறுதான் தானே ஊரும் ! இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் ! உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் ! உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் ! உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி ! இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி ! தர்மம் தலை காக்கும் என்பார்கள் ! தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை ! மனிதனை மனிதன் காப்பது கடமை ! மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் ! கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை ! கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை ! தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று ! பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று ! தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று ! தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று ! .

கருத்துகள்