தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,! நூல் மதிப்புரை : மரகதம், தினமலர் நாளிதழ்.

தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,! நூல் மதிப்புரை : மரகதம், தினமலர் நாளிதழ். வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ***** தமிழகத்தில் குடிப்பழக்கத்தினால் வன்முறை ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளி, கல்லூரி வேறுபாடின்றி குடிக்கு அடிமையாகி திறமை, படிப்பு, ஒழுக்கத்தை இழந்து பாழ்பட்டு வருகின்றனர். கொரோனா காலங்களில் மதுக்கடைகள் மூடிய நிலையில் வன்முறை, கொலை, கொள்ளை நடக்கவில்லை. எனவே, மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல். நமது சமுதாயம் மதுவினால் சீரழிவதை அழகான கவிதைகளால் ஆதங்கப்படுகிறார் ஆசிரியர். சிந்தித்துப் பார்த்து செயலை மாற்று என்பதைப் போல குடிகாரர்கள் இந்த கவிதைகளை படித்து சிந்தித்து குடியை விட்டுவிட வேண்டும்.

கருத்துகள்