ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி.!

ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி.! ரசனையற்றவனுக்கு/ வெறும் குச்சிதான்/ புல்லாங்குழல் ! பெரிய நிறுவனத்தின்/ சின்னப்புத்தி/ காய்கறி வணிகம் ! ரசிப்பது தவறில்லை/ பறிப்பது தவறு/ மலர்கள் ! மடக்கட்டங்கள் கணித்து/ மனக்கட்டிடம் தகர்ப்பு/ சோதிடம் ! உழைக்காமல் உண்ணும்/ சோம்பேறிகள் உளறல்/ சோதிடம் ! கோடாரியை/ கூர் தீட்டுகையில்/ வருந்தியது கைப்பிடி ! தாத்தா பாட்டியை/ நினைவூட்டியது/ வெற்றிலைப்பெட்டி ! படிக்காவிட்டாலும் பாடமாகுங்கள்/ மருத்துவக்கல்லூரிக்கு/ உடல் தானம் ! அம்மாவை விட குழந்தைகள்/ அதிகம் மகிழ்ந்தன/ அம்மாவிற்கு விடுமுறை ! உருவம் இல்லை/ உணர்வு இனிமை/ தென்றல் ! இருபாலருக்கும் பொருந்தும்/ இனிய பெயர்/ பாரதி ! நீட்டிக்கச் சொன்னார்கள்/ திருமண வாழ்த்துரை/ சமையல் முடியும்வரை

கருத்துகள்