தீண்டாதே தீயவை ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! பாராட்டுரை : டாக்டர் மூ .இராசாராம், இஆப

தீண்டாதே தீயவை ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! பாராட்டுரை : டாக்டர் மூ .இராசாராம், இஆப வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17.பக்கங்கள் 60.விலை ரூபாய் 50.பேச 044 24342810. அன்பார்ந்த திரு. கவிஞர் இரவி அவர்களே, தாங்களின் சமுதாய சிந்தனை கொண்ட “தீண்டாதே தீயவை” படித்தேன். ரசித்தேன். இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான சமூக சிந்தனை கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளீர்கள். குறிப்பாகவும் சிறப்பாகவும் கருத்துக்கள் கொண்ட வைர வரிகளை பாராட்டாமல் இருக்க இயலாது. இவ்வாக்கியங்கள் அனைத்தும் பொது இடங்களிலும் குறிப்பாக பெரிய எழுத்துக்களில் பதிவு செய்யப்படவேண்டிய வைர வரிகளாகும். நண்பனை பகைவனாக்கும் மது! நட்பை முறித்திடும் மது! மனிதரின் திறனுக்கு தடை மது! முயற்சியை முறிக்கும் மது! மிதப்பதாக நினைத்து மூழ்கி விடுகின்றனர் பாதையை மறந்து விடுகின்றனர்! வருங்கால தூண்கள் வழுக்கி விழுமிடம் மதுக்கடை! தங்கள் கவிதைகளை பலர் ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது வியப்புக்குரியதன்று. இவ்வரிசையில் “தீண்டாதே தீயவை” எனும் இந்நூல் தங்களது கவிதை மகுடத்திற்கு மற்றும் ஒரு மணியாகும்.

கருத்துகள்