தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, 1 வாழ்த்துரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, 1 வாழ்த்துரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், 93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை – 625 003. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ******. வாழ்த்துரை நண்பர் கவிஞர் இரா.இரவியினுடைய ‘தீண்டாதே தீயவை’ ஹைக்கூ கவிதைகளை வாசித்தேன். மதுவுக்கும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் ஆட்பட்டு விட்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நன்னூல் இந்நூல்! என்றால் மற்றவர்கள் வாசிக்கத் தேவையில்லையா? என்று கேட்கக் கூடாது. இது மனித சமூகம் அவ்வளவுக்குமானது! குறிப்பாக இதை எல்லா மொழிகளிலும் கூட மொழிபெயர்த்து வெளியிடலாம். அதற்கான தகுதிஉடைய ஒரு நன்னூல் இந்நூல்! திரு.இரவிக்கு சுற்றி வளைத்து பேசவும் தெரியாது, எழுதவும் தெரியாது, எல்லாமே நெற்றியடி தான்! இக்கவிதைகளும் அந்த ரகமே! கவிதை என்பது வாசித்த மாத்திரத்தில் மனதுக்குள் விழுந்து, வாசித்தவர்களை மெய்மறக்க வைக்க வேண்டும். குறைந்தபட்சம், சிந்திக்கவைத்து அதன்படி நடக்க வைக்க வேண்டும். இரவியின் இந்த நூல் வாசிப்பவர்களை வசப்படுத்தி, சிந்திக்க வைத்து, அதன்படி நடக்கவும் வைக்கும். நன்னூல் படைத்த திரு.இரவிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கருத்துகள்