படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.#

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.# கண்ணதாசன் #மறைந்த_போது: #கவிஞர்_வாலியின் #வர்த்தைஜாலம் ☆☆☆☆☆ >மகாகவி கண்ணதாசனின் மரணத்திற்குக் காரணம் - #மதுவருந்தியது; இது தெரிந்து #மது #வருந்தியது!! >குஜராத் பூகம்பத்தில் பலர் பலியான போது: இவர்கள் - கண்மூடியதால் #மண்மூடியவர்களல்ல; #மண் #மூடியதால் கண் மூடியவர்கள்!! >எம்ஜிஆர் அவர்களின் மறைவின் போது: உன் உதடுகளில் உட்கார்ந்தது #என்_முதல்_வரி; உலகறிந்தது #என்முகவரி!! >சிலப்பதிகாரக் கோவலன் இறந்தது பற்றி: #புகாரில் பிறந்தவன், (தவறான) #புகாரில் இறந்தவன்! >கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்துச் சின்னஞ்சிறு சிறார்கள் சாம்பலான போது: > #கோயில்கள் - நிறையக் கொண்ட ஊர் #குடந்தை; இந்த அநியாயத்திற்கு அத்தனை #தெய்வங்களுமா #உடந்தை!! நண்பர்களே!! ...இச்சிறு கவிதைகள் அத்தனையும் காப்பியக் கவிஞர் #வாலி எழுதியது. >சோகமான நிகழ்விலும் கூட #தமிழ் அவரிடம் எப்படியெல்லாம் கைகட்டிக் #கவிதை சொல்கிறது பார்த்தீர்களா!! * * * * * தகவல் உதவி: திருமதி. Srimathiambal Thiyagarajah

கருத்துகள்