படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.*
பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.*
*தயிருக்கு கஷ்டம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.*
*வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.*
*பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.*
*இதனுடைய அர்த்தம் என்னவென்றால், அடிக்கடி கஷ்டம், சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறாமல் சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.*
*பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.*
*பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது.*
*அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.*
*தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது.*
*அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.*
*வெண்ணெயை கொதிக்க வைத்தால்* *நெய் ஆகிறது*
*அது ஒரு போதும் வீணாவது இல்லை*
*ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள், ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.*
*உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது*
*அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள்.*
*தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்.*
*தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள்.*
*பின் அப்பொழுது பாருங்கள், நீங்கள் ஒரு பொழுதும் தோல்வியே காணாத பசுமையான, மனிதனாக இருப்பீர்கள்.*
கருத்துகள்
கருத்துரையிடுக