பூங்காற்றே எனைத் தீண்டு! தீந்தமிழ் கேட்கட்டும்! கவிஞர் இரா. இரவி

பூங்காற்றே எனைத் தீண்டு! தீந்தமிழ் கேட்கட்டும்! கவிஞர் இரா. இரவி பூங்காற்று நம்மைத் தீண்டினால் தமிழ்க்கவிதை வரும் பூங்காற்று வாசம் தரும் சுகம் தரும் தென்றல் வந்து தீண்டுவது பரவசம் தான் தேன்தமிழ்க் கவிதைகள் படிப்பதும் சுகம் தான் பூவைத் தீண்டிவரும் தென்றல் மணமுண்டு புத்துணர்வு தரும் புத்தெழுச்சியும் தரும் வெயில் காலத்தில் வறண்டு இருக்கும்போது வாடைக் காற்றென தென்றல் வருவது அரிது! உருவம் இல்லாவிட்டாலும் உணர்வு தரும் உள்ளூர பரவசம் தரும் தென்றல் தீண்டுகையில் ரசனை உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும் தென்றல் ரசனையற்றவர்கள் உணர்வதில்லை தென்றல் சுகம் இயற்கையாக வரும் பூங்காற்றே நலம் பயக்கும் செயற்கையான குளிரூட்டல் கேடு தரும் கிராமத்து மனிதர்கள் பலருக்கு நோயில்லை காற்று அவர்கள் வசம் எப்போதும் இருப்பதால் நகரத்தில் நோய்கள் பல பெருகிடக் காரணம் நல்ல காற்று பூங்காற்று வீசாததே ஆகும் சுவாசக்காற்று பூங்காற்றாக இருந்து விட்டால் சுவாசம் நன்றாகி நோய் ஓடி நலம் பயக்கும் அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல அளவின்றி வீசும் காற்றும் விசமாகும் புயலாகும் இதமான பூங்காற்றே இதம் தரும் என்றும் இனியத் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுக்க உதவும்.

கருத்துகள்