ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி!
மண்டபங்களை விட/
காவல் நிலையத்தில் அதிகம்/
திருமணம்!
–
——————-
–
உணருங்கள்/
கௌரவம் இல்லை/
கௌரவக் கொலை!
–
———————
–
ஆடியவர் அடங்கினார்/
மற்றவர்கள் ஆடினர்/
பிணத்தின் முன்!
–
——————–
–
புதுமொழி/
கற்றது கணினி அளவு/
கல்லாதது இணைய அளவு!
–
———————
–
தந்தது/
தினமும் வலி/
தீபாவளிக் கடன்
–
———————
–
விவசாய நாட்டில்/
காட்சிப் பொருளானது/
கலப்பை
–
———————–
–
கொடிய நோய்/
மருந்து காணுங்கள்/
தமிங்கிலம்
–
———————-
–
பெருகப் பெருக/
பெருகியது வன்முறை/
மதுக்கடை
சிறப்பு வெகு சிறப்பு
பதிலளிநீக்கு