படித்து நெகிழ்ந்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்து நெகிழ்ந்தது ! கவிஞர் இரா .இரவி ! துர்நாற்றம் கொண்ட* *மலத்தை அள்ளி வீசியும்* *தன் அறிவு புகட்டும்* *ஆற்றல் நிறைந்த* *சமூக நீதிக்கான* *சேவை மனப்பாண்மையை* *துவண்டு விடாமல்* *விடா முயற்சியாக* *தொடர்ந்து செய்த* *இந்தியா நாட்டின்* *முதல் பெண் ஆசிரியர்* *யார் தெரியுமா?* இவர் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்புவார் ஏனெனில் அவர் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுங்கிலும் சாதி இந்து வெறியர்கள் சாணத்தையும், சேற்றையும், மலத்தையும் வாரி அவர் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பார். *அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?* கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கு கல்வி கற்பித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் விதவை பெண்களுக்கும் கல்வியின் வழியே புது பாதையை அமைத்து கொடுத்தார். அனைவரும் சமம் என்ற மனிதநேயத்தை தூக்கிப்பிடித்தார். அவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் *அன்னை சாவித்திரிபாய் புலே அவர்கள்* இவரின் 191ஆவது பிறந்த தினம் சனவரி 03 2022 அன்று வருகின்கது. *அன்னை சாவித்திரி புலே அவர்களை பற்றிய* தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். *பிறப்பு:* *1831ஆம் ஆண்டு ஜனவரி 3* ஆம் தேதி *மகாராஷ்டிரா* மாநிலத்தில் உள்ள *சதாரா மாவட்டத்தில் நைகான்* என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரி புலே. இவர் கல்வி வாய்ப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் குழந்தை திருமணம் வழக்கில் இருந்தது. *திருமண வாழ்க்கை:* *1840* ஆம் ஆண்டு தனது *ஒன்பதாம் வயதில்* *மகாத்மா ஜோதிராவ் புலேவை (வயது 13) மணந்தார் சாவித்திரிபாய்.* இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். *போராட்ட வாழ்க்கை:* *ஜோதிராவ் புலே ஒரு சமூகப் போராளி.* அக்காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க கூடாது என்ற விதிமுறைகளை விதித்து வைத்திருந்தனர் சாதி இந்துக்கள். அதை எதிர்த்துப் போராடியவர் ஜோதிராவ் புலே. தன்னுடைய இந்த போராட்டத்தில் சாவித்திரிபாயையும் இணைத்துகொண்டார். *பெண்களுக்கு கல்வி:* அன்னை சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி கற்றுக்கொடுத்தார் ஜோதிராவ் புலே. கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விதவை பெண்களுக்கும் கல்வியைக் கொடுக்க இருவரும் புறப்படுகிறார்கள். *ஜோதிராவ் புலே 1846* ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி கற்பித்தனர். *பள்ளி தொடக்கம்:* *1848* ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேவில் 1848ஆம் ஆண்டு தொடங்கினார்கள். ஒன்பது மாணவிகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் சாவித்திரிபாய் புலே. *கடுமையான எதிர்ப்பு:* பழமைவாதிகளும் உயர்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், சாணத்தையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் கொடுத்தனர். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு, ஜோதிராவ் புலேவிடம் கூறினார் சாவித்திரிபாய் புலே. "தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து கொண்டு செல்! பள்ளி சென்று பின் வேறோர் புடவையை மாற்றிக்கொள்!" என்று கணவர் சொன்னதையே பின் பற்றி கல்விப் பணியாற்றினார். *விதவை பெண்களுக்காக போராட்டம்:* அக்காலத்தில் குழந்தை திருமணத்தால் விதவையான பெண்களுக்கு மொட்டையடிக்கும் கொடுமையான பழக்கம் வழக்கத்தில் இருந்தது. இதைக்கண்டித்து நாவிதர்களை திரட்டி, *1863* ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தி அதில் வெற்றி பெற்றார் சாவித்திரி. மேலும், விதவை பெண்களுக்கு *மறுமணமும் செய்து வைத்தார்.* *பெண்கள் சேவை மையம்:* *1852* ல் சாவித்திரிபாய் தொடங்கி வைத்த *"மஹிளா சேவா மண்டல்" (பெண்கள் சேவை மையம்)* மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. *1870* ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான *52 குழந்தைகளுக்கு* *உண்டு உறைவிடப் பள்ளியை* நடத்தினார் சாவித்திரிபாய். *மருத்துவமனை அமைப்பு:* *1897* ல் *மகாராஷ்டிரா மாநிலத்தில்* பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர். ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது. பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள *சாசனே மலா* (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. *இறப்பு:* நோயால் அவதிப்பட்டவர்களைத் தோளில் சுமந்து வந்து தன் மகனின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவி செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு *மார்ச் 10, 1897* ல் இயற்கை எய்தினார். தன் இறுதி நாள் வரை சமூக நலன்களுக்காக சேவை செய்த அன்னையின் பிறந்த தினத்தை அனைவரும் சேர்ந்து கொண்டாடுதலே சிறப்பானது. *சிறப்பு:* பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், *மகாராஷ்டிரா அரசு* *சாவித்திரிபாய் புலேயின் பெயரில்* ஒரு விருதினை அறிவித்திருக்கிறது. *2015* ல் புனே பல்கலைகழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இந்திய அஞ்சல் துறையானது *1998ஆம் ஆண்டு மார்ச் 10ல்* சாவித்திரிபாய் புலேவை பெருமைபடுத்தும் விதமாக *ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.* *வரலாறு:* கல்விக்காக பல கொடுமைகளை தாங்கிக்கொண்டு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கிய சமூக சீர்திருத்தவாதி *அன்னை சாவித்திரிபாய் புலே அவர்களின்* பிறந்த தினத்தை *ஆசிரியர் தினமாக கொண்டாட தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.* குறிப்பிட்ட சமூகம் மற்றும் கல்வி பயின்றதால், வரலாறு சரியாக உண்மையாக தெரிவிக்கப்படவில்லை. அன்னை சாவித்திரி புலே போன்ற பல சமூக போராளிகள் வராலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் *சனவரி 03. திங்கள் கிழமை* அனைத்து இடங்களிலும் *அன்னை சாவித்திரிபாய் புலேயின்* திருவுருவப் படத்தை வைத்து அவரது வரலாற்றை அனைவருக்கும் எடுத்துக்கூறும் நிகழ்வாக இதனை கொண்டாடிட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு வேண்டுகோள் விடுத்து உள்ளது. நம் பகுதியிலும் *இந்திய நாட்டின்* *முதல் பெண் ஆசிரியர்* *அன்னை சாவித்திரிபாய் பூலே* *அவர்களின் பிறந்த தினத்தை* நாம் கொண்டாடி சிறப்பிப்போம். 🧕🧕🧕✊🙏✊🧕🧕🧕 *அன்னை சாவித்திரி பூலேக்கே* *ஜெய் ஜெய் ஜெய் ஜெய்* என்று முழங்கி சூழுரைத்து கொண்டாடி மகிழ்வோம் வரலாற்று உண்மையை உலகுக்கு உரக்க கூறிடுவோம்

கருத்துகள்