இயற்கை! கவிஞர் இரா. இரவி !

இயற்கை! கவிஞர் இரா. இரவி ! இயற்கையை இரக்கமின்றி மனிதன் அழித்தால் இயற்கை இரக்கமின்றி மனிதனையும் அழிக்கும்! இயற்கை ரசிக்க மட்டுமே மனிதனுக்கு உரிமை இயற்கையை வருங்கால சந்ததிகளுக்கு விட்டி வைத்திடுக! இயற்கையை மனிதா நீ சிதைக்க சிதைக்க இயற்கை சீற்றம் கொண்டு மனிதரைச் சிதைக்கும்! சுனாமியாக வந்து சீற்றம் கொண்டு சுருட்டியதை சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று மனிதா! அள்ள அள்ள வரும் அட்சயப் பாத்திரமல்ல ஆற்றுமணல் அள்ளி அள்ளி வருங்காலத்திற்கு கேடுகள் செய்யாதே! கற்கள் உருண்டு உருண்டு மணலாக பல வருடங்கள் கண்ணில் கண்டதும் சில நிமிடங்களில் கடத்துகின்றாய் மணலை! கிணறுகளில் வீடுகளில் தண்ணீர் வந்த காலமுண்டு கிணறு இன்றி ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் இன்று! உறிஞ்சி உறிஞ்சி எடுத்து இயற்கையை ஊனமாக்குகிறாய் உறிஞ்சி குளிர்பானமாக்கி கொள்ளை அடிக்கின்றனர்! அழகிய பாறைகளை எல்லாம் வெடிவைத்து தகர்க்கின்றாய் அந்த இயற்கை சினம் கொண்டு சீற்றம் எடுக்கின்றது! இயற்கையை இயற்கையாக இருக்கவிடு மனிதா இனிமையாக ரசித்து நீ வாழலாம் தொல்லையின்றி! மழை வராமல் பொய்ப்பதற்கும் பெய்து கெடுப்பதற்கும் மனிதா நீயே தான் காரணம் ஆகின்றாய் உணரு! மரங்களை வெட்டி வெட்டி வீழ்த்துவதை நிறுத்து மரங்களை குழந்தைகளைப் போல பேணி வளர்த்திடு!

கருத்துகள்