சூதாட்டத்திற்கு இரையாகாதே! கவிஞர் இரா. இரவி !

சூதாட்டத்திற்கு இரையாகாதே! கவிஞர் இரா. இரவி ! இணையவழி சூதாட்டம் விளையாடி இன்று பல குடும்பங்கள் அழிந்துவிட்டது! போதையில் பெரும்போதை சூதாட்டம்! பாதையை மாற்று சூதுவழிக்குப் போகாதே! விளம்பரம் செய்து மூளையைத் திருடுவார்கள்! வீணாக உன்னை பின்னால் வீழ்த்துவார்கள்! உழைத்து சேர்ப்பதே அறம் என்பதை அறிந்திடு! உழைக்காமல் சேரும் பணம் அறமன்று அறிந்திடு! உலகம் முழுவதும் சூதாட்டத்தை தடை செய்திடுக! உலகம் முழுவதும் பலியாகி வருகின்றன உயிர்கள்! ஒழுக்கக் கேடான செயல் சூதாட்டம் உணரு! ஒருபோதும் சூதாட்டம் பக்கம் செல்லாதே! கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றன நிறுவனங்கள்! கோமாளித்தனமாக சூதாடுவதை உடன் நிறுத்திடுக! பணத்தாசை வெற்றி ஆசை காட்டி ஈர்ப்பார்கள் ! பணத்தை இழந்து பிச்சைக்காரனாக மாற்றும்! பணம் இலவசமாகத் தருவதாக சொல்வார்கள் ! பணத்தை இழக்க வைத்து கடன் வாங்க வைக்கும்! விட்டதைப் பிடிக்க வேண்டுமென்று விளையாடுவாய்! விட்டதைப் பிடிக்காமல் மேலும் மேலும் இழப்பாய்! சராசரி மனிதனாக வாழ முடியாமல் ஆக்கும்! சதா சூதாட்டமே நினைவில் நிற்கும் உணரு! சம்பாதித்ததாக சிலர் சொல்வார்கள் நம்பாதே! சம்பாதித்த பணத்தை பலரும் இழந்து உள்ளனர்! பகுத்தறிவைப் பயன்படுத்தி விலக்கு மனிதா! பாழும் கிணற்றில் விழாது விழித்தெழுந்திடு!

கருத்துகள்