"வைக்கம் வீரர் பெரியார்"

"வைக்கம் வீரர் பெரியார்" கேரளம் திருவதாங்கூர் கோட்டையம் "வைக்கம்" என்ற ஊரில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் மேல் சாதி மக்கள் தவிர மற்ற சாதியினர் நடக்கவே கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. திருவதாங்கூர் மாநிலம் "வர்ணாசிரமதர்மம்" கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட , மகாத்மா காந்திஅடிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.ரா அவர்கள்( தன் உடல் நலம் குன்றி இருந்த நிலையிலும்) வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி, 22.04.1924ல் மனைவி நாகம்மையார் , சகோதரி கண்ணம்மாளுடன் கைது செய்யப்பட்டு 6 மாதம் பசுப்புரா என்னும் சிறையில் அடைக்கப்பட்டார். திருவதாங்கூர் மகராஜா மரணத்திற்கு பிறகு சிறையிலிருந்து பெரியார் விடுதலையானார். 21.06.1925 முதல் தடை நீக்கப்பட்டு கோயிலைச்சுற்றி அனைத்து சாதியினரும் நடக்க அனுமதி வழங்கப்பட்டது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் வெற்றி வாகை சூடினார். அதனால் தந்தை பெரியாரை "வைக்கம் வீரர் " என்று அழைக்கின்றனர். (கேவிஆர்) தந்தை பெரியார் இறக்க வேண்டும் என்று யாகம் நடத்தியவர்கள் இறந்தார்கள் .பெரியார் வாழ்ந்தார்

கருத்துகள்