படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. ! ஓஷோ.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. ! ஓஷோ. இளவரசருக்கு உடை அணிவதில் விருப்பமில்லை. அதனால் அவர் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தார். அரசர் மற்றும் அமைச்சர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை. எவ்வளவோ வைத்தியர்கள் பார்த்தாயிற்று பலனில்லை. நாட்டுமக்கள் இளவரசருக்கு பயித்தியம் என்று பேச தொடங்கினார்கள். அரசர் மிகவும் கவலையில் இருக்கும்போது ஓர் நாள் பிச்சைக்காரன் போல் இருந்த ஒருவன் வந்து அரசரை சந்தித்தான். இளவரசரை நான் குணபடுத்துகிறேன். அரசருக்கு நம்பிக்கை இல்லை ஆனால் அனுமதித்தார். இளவரசர் அறைக்குள் வந்த அந்த பிச்சைக்காரன் தன்னுடைய உடைகளை களைந்துவிட்டு ஓரமாக அமர்ந்துகொண்டான். இளவரசருக்கு தன்னைப்போல் ஒருவரை கண்டு சந்தோசம். இருவரும் நண்பர் ஆனார்கள். பிச்சைக்காரன் சொன்னான் மற்றவர்களை போல் நாமும் வெளியே சுதந்திரமாக செல்வோம் வா. இளவரசன் சொன்னான் வெளியே உள்ள எல்லோரும் உடை அணியும் பயித்தியங்கள். நாம் வெளியே போனால் எல்லோரும் கல்லால் அடிப்பார்கள் என்ன செய்வது? பிச்சைக்காரன் சொன்னான், நாம் அவர்கள் போல் வேஷமிட்டு செல்வோம். இளவரசருக்கு இது பிடித்திருந்தது. இருவரும் உடையணிந்து வெளியே வந்தனர். அரசருக்கு மிகுந்த ஆச்சர்யம். எப்படி இது? பிச்சைக்காரன் சொன்னான் இதற்கு முன்னாள் முயற்சி செய்தவர்களெல்லாம் இளவரசருக்கு பயித்தியம் போலவும் வெளியிலுள்ளவர்கள் சரியானவர்கள் போலவும் முயற்சி செய்தனர். ஆனால் அதை நான் தலைகீழாக மாற்றி முயற்சித்தேன் அவ்வளவுதான். முட்டாள்கள் முன்னே தன்னை புத்திசாலியாக காட்டும் ஒருவன் முட்டாள் ஆக்கப்படுவான். ஏனென்றால் முட்டாள்கள் ஒரு புத்திசாலியை காணும்போது அவர்களின் அகந்தை நேரடியாக தாக்கப்படுகிறது. முட்டாள்கள் முன்னே ஒரு புத்திசாலி முட்டாளாக இருப்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம். __

கருத்துகள்