20.11.2021அன்று திருக்குறள் செம்மல்ந.மணிமொழியனாரின் ஐந்தாம்நினைவேந்தல்

20.11.2021அன்று திருக்குறள் செம்மல்ந.மணிமொழியனாரின் ஐந்தாம்நினைவேந்தல்நாள் மதுரை காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது.நிகழ்வினை உலகத்திருக்குறள் பேரவை நடத்தியது.நினைவுக்கவியரங்கமும் நடைபெற்றது.மதுரை உலகத்தமிழ்சங்க இயக்குனர் திருமதி தா.லலிதா சிறப்புரையாற்றினார்.மதுரை காலேஜ் ஹவுஸ் நிர்வாக இயக்குனரும் மணிமொழியனாரின் புதல்வருமான கார்த்திக்மணிமொழியன் மணிமொழியனாரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.கவிஞர் கவிபாரதிஇரா.அசோக்ராஜ் விழாவினை தொகுத்து வழங்கினார்.பேரா.யாழ்சந்திரா.மேனாள் துணைஆட்சியர் அய்யாகருப்பையா ஆகியோர் அய்யா மணிமொழியனாரின் அரும்பெரும்ண்புகளையும், இலக்கிய அறிஞர்களை ஆதரித்து நின்றதையும்.அவர்தம் திருக்குறள் புலமையினையும் சிறப்புகளையும் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு கவியரங்கில் கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன்.கவிஞர் அர்ச்சுனன்,ஹைக்கூத்திலகம் இரா.ரவி.வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் மற்றும் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனாரின் புகழ்பாடினோம்.மதுரையின் இலக்கியப்பேரறிஞர்களும்,மாநகர்ப்பெரியோர்களும் பங்கேற்றனர்.தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சாந்திகுமாரஸ்வாமிகள் ஆசியுடன் விழா இனிதே நிறைவுற்றது.நன்றி.கவிஞர் அர்ச்சுனன்

கருத்துகள்