மேடைக் கலைவாணர் நன்மாறன் புகழுக்கு இறப்பில்லை கவிஞர் இரா. இரவி

மேடைக் கலைவாணர் நன்மாறன் புகழுக்கு இறப்பில்லை கவிஞர் இரா. இரவி மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர் மேடைகளில் நகைச்சுவைகளை வழங்கியவர் எளிமையின் சின்னமாக வலம் வந்தவர் எல்லோருக்கும் தொண்டுகள் பல புரிந்தவர் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எதையும் துணிவுடனே கேள்விகள் கேட்டவர் நடராசன் குஞ்சரத்தம்மாள் மகனாகப் பிறந்தவர் நாடறிந்த நேர்மை அரசியல்வாதியாக இருந்தவர் மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை வென்றவர் மதுரையின் கிழக்காகவே நாளும் வலம் வந்தவர் அரசியல் மட்டுமல்ல இலக்கிய மேடைகளிலும் அளப்பரிய ஆற்றலால் தனிமுத்திரை பதித்தவர் மேடைக் கலைவாணர் பட்டத்திற்கு பொருத்தமானவர் மேடையில் கலைவாணர் போலவே நகைச்சுவை நல்கியவர் பொதுவுடைமைக் கட்சியின் தூணாக நின்றவர் பொதுவுடைமைத் தலைவர்கள் பற்றி நூல் வடித்தவர் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளராகவும் வந்தவர் இலக்கியம் அரசியல் இருவிழிகளாகக் கொண்டவர் என்னுடைய கவிதை நூல்களைப் படித்துப் பாராட்டியவர் என்னை மட்டுமல்ல பல கவிஞர்களைப் பாராட்டியவர் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் கரை வேட்டிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாதவர் சொந்தவீடு கூட இல்லாமல் எளிய வாழ்வு வாழ்ந்தவர் சொந்தபந்தம் என்று பாராமல் அனைவருக்கும் உதவியவர் காமராசர் கக்கன் வரிசையில் இடம்பிடித்தவர் காலம் என்றும் மறக்காது மேடைக் கலைவாணரை மேடைக் கலைவாணர் புகழுக்கு மரணமில்லை மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!

கருத்துகள்