ஹைக்கூ கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி ! பொன்னகை விட/ பெண்களுக்கு அழகு/ புன்னகை! வானில் மேகங்கள் எனும்/ சிக்கிமுக்கி கற்களின் உரசல்/ மின்னல்! மனிதனின்/ முதல் நவீனம்/ மொழி! வடிவானவள்/ அழகானவள்/ வடிவம்! காது இல்லாத பாம்பிடம்/ முட்டாள் ஊதுகிறான்/ மகுடி! அழிவிற்கு/ வழி வகுக்கும்/ ஆயுதம்! பணக்கரார்களின்/ பாசக்கார நண்பன்/ வைரம்! இன்றைய மனிதர்கள்/ மறந்துவிட்ட ஒன்று/ தர்மம்! மனிதனின் பயனுள்ள/ கண்டுபிடிப்பு/ கருவி! உணர்ச்சி வயப்படாமல்/ அறிவு வயப்பட்டு எடுப்பது/ யுத்தி! ஏழைகளின் வீட்டிற்கு/ தேவையில்லை பூட்டு/ சாவி!

கருத்துகள்