படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
பண்பாளர் போப் ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம்:
நதிகளோ தண்ணீரைத் தான்குடிப்ப தில்லை!
மரங்கள் கனிகளைத் தானுண்ப தில்லை!
கதிரோன் ஒளியைத் தனக்கேற்ப தில்லை!
மலர்கள் மணங்களைத் தாம்ரசிப்ப தில்லை!
பிறர்மகிழ வாழ்தல் இயற்கை விதியாம்!
பிறக்கின்றோம் நாம்தான் பிறருக் குதவ!
பிறவித் துயரங்கள் எப்படியென் றாலும்
நமக்கு மகிழ்ச்சிதான் நல்வாழ்க்கை என்றால்!
நமக்குப் பெருமகிழ்ச்சி
நம்மால் மகிழ்ச்சி
பிறருக்கு வாழ்விலென்றால் தான்.
மதுரை பாபாராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக