கீழடி! கவிஞர் இரா. இரவி !
மனிதர்களின் முதலடி/
தமிழ்த்தாயின் மடி/
கீழடி!
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு/
முந்தியது/
கீழடி!
எழுத்தறிவோடு வாழ்ந்தனர்/
எல்லோரும் அறிந்திருந்தனர்/
கீழடி!
தோண்டத் தோண்ட/
தோன்றின பொருட்கள்/
கீழடி!
தொழில்நுட்ப அறிவோடு/
தொன்றுதொட்டு வாழ்ந்தனர்/
கீழடி!
உலகின் ஆசான்/
உதித்தது/
கீழடி!
உலகிற்கு மேலடி/
உண்மையில் முதலடி/
கீழடி!
மதுரையின் பெருமைகளில்/
ஒன்றைக் கூட்டியது/
கீழடி!
கண்காட்சியில் கண்டு/
கண்கள் விரிந்தன/
கீழடி!
ஆறாயிரம் ஆண்டுகள்/
வரலாறு புதைந்துள்ளது/
கீழடி!
ஆச்சரியம் அதிசயம்/
உண்மையில் அற்புதம்/
கீழடி!
எழுத்தறிவித்தனர்/
எல்லாம் வைத்திருந்தனர்/
கீழடி!
சுடுமண் கலை/
சொல்லித் தந்தவர்கள்/
கீழடி!
முந்தைய நாகரிகம்/
முன்னேற்ற நாகரிகம்/
கீழடி!
இந்தப் பொருட்கள் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா/
கீழடி!
தமிழன் என்று சொல்லடா/
தலை நிமிர்ந்து நில்லடா/
கீழடி!
கருத்துகள்
கருத்துரையிடுக