உலக சுற்றுலா தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக சுற்றுலா தினம் ! கவிஞர் இரா .இரவி ! பார்க்காத இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா ! இயற்கை வனங்களுக்குச் சென்று இனிதே ரசித்திட உதவிடும் சுற்றுலா ! அருவிகளுக்குச் சென்று குளித்து ஆனந்தம் அடைந்திட உதவிடும் சுற்றுலா ! மலைகளின் வனப்பை ரசித்து பார்ப்போரின் மனதிற்கு மகிழ்ச்சி தர உதவிடும் சுற்றுலா ! சிற்பக்கலைகளை ரசித்து சிந்தை சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா ! ஓவியங்களைக் கண்டு ரசித்து உள்ளம் உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா ! பிறரது நல்ல பண்பாட்டை அறிந்திட பயணிக்க என்றும் உதவிடும் சுற்றுலா ! அறியாதவற்றை அறிந்து கொள்ள அனைவருக்கும் உதவிடும் சுற்றுலா ! தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள தினமும் அனைவருக்கும் உதவிடும் சுற்றுலா ! புரியாதவற்றைப் புரிந்து கொள்ள புலம் பெயர உதவிடும் சுற்றுலா ! திருவிழாக்களை கண்டு ரசிக்க தவறாமல் உதவிடும் சுற்றுலா ! தனி மனிதர்களின் வாழ்வாதாரங்கள் தரணியில் செழிக்க உதவிடும் சுற்றுலா ! அரசுக்கு அன்னியச் செலவாணியை அளவின்றி ஈட்டிட உதவிடும் சுற்றுலா ! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை யாவருக்கும் உணர்த்திட உதவிடும் சுற்றுலா ! .

கருத்துகள்