*ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர்* *குருசெயச்சந்திரனின்* *இனிய நற்காலை வணக்கம்*

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்* தமிழ்நாடு தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும். *செண்பகப்பொழில் என்று அழைக்கப்பட்டது தென்காசி ஆன கதை* முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. கோவில் கி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடி அகலம்: தெற்கு-வடக்கு-318 அடி தற்போது கோபுர உயரம்: 180 அடி ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள் உள்ளன பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார். இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும் அதற்கு சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில் என்று பெயர் இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாச லெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு. ஒற்றைக் கல் சிலைகள் இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன. அக்னி வீரபத்திரர் ரதிதேவி மகா தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் காளிதேவி மகாவிஷ்ணு மன்மதன் வீரபத்திரர் பாவை பாவை தர்மன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் கர்ணன் மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டு அன்று வாழ்ந்த பெருந்தச்சர்கள. பலர்கூடி அற்புத வேலைப்பாடுகளுடன் செய்து சிறப்புச் செய்துள்ளனர் இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகளையும் பெருமையையும் பெரிய அளவிலும், அழகிலும் காண கண்கோடி வேண்டும். இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனத்தோன்றுகின்ற அளவில் தமிழகத்தில் வாழ்ந்த ஆசாரிமார்கள் எல்லாகோவில்களிலும் ஒருவரே செய்து போல் செய்து அவர்களின் மரபுகளையும் வழிவழியாக வந்த தொழில் நுட்பங்களையும் காணமுடிகிறது. தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. சச்சிதானந்தபுரம் முத்துத்தாண்டவநல்லூர் ஆனந்தக்கூத்தனூர் சைவமூதூர் தென்புலியூர் குயின்குடி சித்தர்வாசம் செண்பகப்பொழில் சிவமணவூர் சத்தமாதரூர் சித்திரமூலத்தானம் மயிலைக்குடி பலாலிங்கப்பாடி வசந்தக்குடி கோசிகை சித்தர்புரி நிறைய எழுத எண்ணம் இருந்தாலும் இத்துடன் முடிப்பதே நலம் என கருதுகிறேன் தினமும் 2400பேர்களுக்கு மேல் அனுப்புகிறேன் *கல்லிலே கலை வண்ணம் கண்ட* *ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர்* *குருசெயச்சந்திரனின்* *இனிய நற்காலை வணக்கம்*

கருத்துகள்