படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
தன்னிகரற்ற தனித்துவம்.
1.உன்னைப் போல் ஒருவனைக் காண்பது என்பது முடியாத ஒன்று.. இருந்தும் நீ ஏன் வேறு ஒருவனை போல் வாழ நினைக்கிறாய்..!
நீ நீயாக இரு உனக்கென ஒரு தனித்துவம் உண்டு. அந்த தனித்துவத்தை எந்த சந்தர்ப்பத்திலும் இழக்காதே.. மற்றவர்களைப் போல் பிரதிபலிக்க ஒரு போதும் முயலாதே.
உன்னை நீ நேசி. மற்றவர்கள் உன்னை வெறுத்தாலும் உன் தனித்துவத்தை நீ நேசி.
2. அவமானத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு.
கோழையைத் தற்கொலை செய்ய வைக்கின்றது.
வீரனை வாழ்ந்து காட்ட வைக்கின்றது.
மற்றவர்களால் நீ அவமானம் செய்யப்படும் போது துவண்டு நின்று விடாதே. உனக்காக தகுதியை உயர்த்துவதற்காக கடுமையாக முயற்சி செய்.. கடுமையாக உழை.. உன்னை அவமானம் செய்தவர்கள் ஒரு நாள் உன் முன் கை கட்டி நிற்பார்கள்.
3. வருமானம் இல்லா வாழ்க்கையை விட தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்.
உனக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும். அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதே.
வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள். இது உனக்கான மரியாதையைத் தேடித் தரும்.
4. கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. ஆனால் அந்த கோபத்தை வீசி எறிய ஒரு சிலரால் தான் முடிகின்றது.
உன் கோபம் உன்னை கட்டுப்படுத்த ஒரு போதும் அனுமதிக்காதே. கோபத்தைக் கட்டுப்படுத்த பழகிக் கொள். கோபத்தை எவனொருவனால் கட்டுப்படுத்த முடிகிறதோ அவன் ஒருவனே வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொள்கிறான்.
5. இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழ வைப்பதில்லை.
நான் என்கின்ற அகம்பாவம்.
அவனா என்கிற பொறாமை.
எனக்கு என்கின்ற பேராசை.
அகம்பாவம், பொறாமை மற்றும் பேராசை இவை மூன்றும் உங்களை தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவை மூன்றும் நோய்களை விட மிகவும் ஆபத்தானவை.
கருத்துகள்
கருத்துரையிடுக