மாண்புமிகு முதலமைச்சர் தளபதி சாதனைத்திலகம் மு.க.ஸ்டாலின் வாழ்க! மதுரை பாபாராஜ் !

மாண்புமிகு முதலமைச்சர் தளபதி சாதனைத்திலகம் மு.க.ஸ்டாலின் வாழ்க! மதுரை பாபாராஜ் ! தெற்கில் எழுந்த கதிரவன் ஸ்டாலின்! தினமும் சாதனை படைத்திடும் ஸ்டாலின்! இந்தியா திரும்பிப் பார்த்திடும் ஸ்டாலின்! பன்னாட்டு மன்றம் பாராட்டும் ஸ்டாலின்! முன்னோடித் திட்டம் தருவது கண்டே எல்லோரும் புகழும் காட்சிகள் உண்டு! உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் நடைமுறை கண்டே வியப்பார்! மக்கள் தொடர்பால் உறவை வளர்க்கும் அருமை நட்புத் திலகம் ஸ்டாலின்! வாக்களித் தவர்கள் மகிழ்ந்து போற்ற வாக்களிக் காதோர் வாழ்த்திப் பேச ஆக்க பூர்வ சாதனை செய்யும் அருமைத் தளபதி ஸ்டாலின் வாழ்க! அமைச்ச ரவையும் அலுவலர் குழுவும் துளியும் சோராமல் கடமைகளை ஆற்றும் அமைப்பைக் கண்டே வாழ்த்துவோம் சூழ்ந்து! அருந்தமிழ் போல வாழ்கபல் லாண்டு!

கருத்துகள்