படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! பெரியார்_கன்பூசியசுக்கு_ஒப்பானவர்! #கட்டுரை: #சீனப்_பேராசிரியர், ' "சி.எஸ்.ஸீ. அவர்கள் (1939)"

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! பெரியார்_கன்பூசியசுக்கு_ஒப்பானவர்! #கட்டுரை: #சீனப்_பேராசிரியர், ' "சி.எஸ்.ஸீ. அவர்கள் (1939)" இன்று தமிழகத்தில், சமூதாயத்துறையில் சிறந்த பணியாற்றிவரும் ஒருவர் உண்டானால், அவர் #பெரியார்_இராமசாமிதான் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் பெரிது; மிகப்பெரிது! சீனதேசத்துச் சன்-யாட்-சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான #கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன் #பெரியார்_இராமசாமி அவர்களை ஒப்பிடலாம். மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்துகிடந்த சீனத்தை, மறுமலர்ச்சி பெறச் செய்த #டாக்டர் #சன்யாட்_சென்னுக்கு வழிகாட்டிய பெம்மான் கன்பூசியஸ் அவர்களைப் போல, உங்கள் தலைவர் பெரியாரும், தமிழ்நாட்டிலிருந்து சாதி வேறுபாட்டை அடியோடு தொலைக்க மிகவும் பாடுபட்டு வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள், அதிதீவிர முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு முதலில் வியப்படைந்தேன். பிறகு அதற்குக் காரணம் #பெரியார்தான் என்று அறிந்தேன்; மகிழ்ந்தேன். 1929-ல் பெரியார் மலாய் நாட்டில் சுற்றுப்பயணஞ்செய்து, மலாய்த் தமிழர்களைத் தட்டி எழுப்பினார் என்பதையும், அவர் அப்போது ஆற்றிய சீர்திருத்த உரைகளால், மலாய்த் தமிழர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் என்பதையும், அவருடைய அரிய தொண்டின் விளைவாக மலாய்த் தமிழர்கள் கீழ்நாட்டின் சிறப்பை நிலைநாட்ட முன்வந்திருக்கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (#நன்றி : #கீற்று_மின்னிதழ்) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இந்த, #சீனத்துப்_பெரியார் #கன்பூசியஸ் பிறந்த நாள் இன்று 28,செப்டம்பர் (கி.மு.551)

கருத்துகள்