கிருஷ்ணாபுரம் வெங்கடச்சலபதி கோயில்* ( கிருஷ்ணாபுரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலாகும். இது திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழர் கட்டிடக்கலையில் அன்றை பெருந்தச்சர்களின் சீறிய பணிகளால் கட்டபட்ட து
இந்த கோயில் நாயக்கர் கட்டிடக்கலைகளின் களஞ்சியமாக உள்ளது.இக்கோயிலின் கல்வெட்டும் 16 ஆம் நூற்றாண்டய ஐந்து செப்பேடுகளும் கோயிலுக்கு அளிக்கபட்ட பல்வேறு மாணியங்கள் குறித்து தெரிவிக்கின்றன. மதுரை நாயக்க மரபின் நிறுவனரான விசுவநாத நாயக்கரின் மகனான கிருஷ்ணப்ப நாயக்கரால் (1563–72) இந்த கோயில் கட்டப்பட்டது என்பது இந்த கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரம் உயர்ந்த கோயில் கோபுரம் ஆகியவற்றுக்கும் கிருஷ்ணப்ப நாயக்கரே காரணமாக இருந்துள்ளார். கோவில் தேர் சீராக செல்வ வசதியாக கிருஷ்ணப்ப நாயக்கர் கோயிலைச் சுற்றி நான்கு மாடவீதிகளையும் அமைத்தார். இந்த கிராமமானது முதலில் திருவேங்கடராயபுரம் என்ற பெயர் கொண்டதாக இருந்தது. கிருஷணப்ப நாயக்கரின் ஆட்சியின் போது கிருஷ்ணாபுரம் என்று பெயர் மாற்றபட்டது. அமைச்சர் விஸ்வநாதரின் மருமகனான தெய்வாச்சிலையார் (மயிலேறும் பெருமாள்) கோயில் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்தார். கோயிலில் அவர் செய்த பணிகள் பற்றிய விரிவான விவரங்கள் குமாரசாமி அவதானியாரால் பாடப்பட்ட தெய்வச்சிலையார் விறலி விடு தூது மற்றும் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலிலும் புகழப்பட்டுள்ளது
*கல்லிலே கலை வண்ணம் கண்ட* *ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர் குருசெயச்சந்திரனின்* *இனிய நற்காலை வணக்கம்*
கருத்துகள்
கருத்துரையிடுக