*ஆதரிப்போம் தபால் துறை சேவைகளை*

*ஆதரிப்போம் தபால் துறை சேவைகளை* Gstக்கு முன்புவரை தமிழ்நாடு முழுவதும் கவர் அனுப்ப ரூ.25 தான் புரபசனல் கூரியரில் கட்டணம். தற்பொழுது ரூ.50 வாங்குகிறார்கள். கேட்டால் ஜி.எஸ்.டி என்கிறார்கள்.😞 25 ரூபாய்க்கு 18% ஜி.எஸ்.டி சேர்த்தாலும் ரூ.4.50 தான் சேர்த்து வாங்க வேண்டும். அதாவது ரூ.29.50 தான். அதே போல் துணி சேம்பிள் பார்சலுக்கு கிலோக்கு ரூ.80 என்று ஏற்றி விட்டார்கள். 😡 இது போல் ஜி.எஸ்.டி மீது பழி போட்டு பல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறது. இந்திய அரசின் தபால் சேவையை ஆதரிப்போம்! நாடு முழுவதும் தற்பொழுது நல்ல வேகத்தில் டெலிவரி தருகிறார்கள். கட்டணம் ரூ.5 தான். அதுவே Speed post என்றால் ரூ.25 தான் கட்டணம். அடுத்த வேலை நாட்களில் டெலிவரி செய்து விடுகிறார்கள். இந்திய அஞ்சலில் பார்சல் கட்டணம் மிக மிக குறைவாக கிலோவுக்கு ரூ.41 தான் வாங்குகிறார்கள். எடை ஏற ஏற கட்டணமும் குறைவாக வாங்கி கொள்கிறார்கள். 👊🏻மேலும் ஆன் லைன் மூலம் உங்கள் தபால் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்றும் நீங்களே பார்க்கவும் முடியும். இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை இனியாவது அதிகம் பயன்படுத்துங்கள். தபால்கள் மற்றும் பார்சல்கள் மிக குறைந்த கட்டணத்தில். கூரியர் சர்வீஸ் இல்லாத குக்கிராமத்துக்கு கூட சரியாக சென்று சேருகிறது. 😌 தயவுசெய்து 🙏🏻இந்த ஒரு மாதம் மட்டும் தபால் சேவையை அனைவரும் பயன்படுத்தி பாருங்கள். இரயில் நிலைய தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது. தயவு செய்து பகிர்வு செய்யுங்கள்

கருத்துகள்