திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்! கவிஞர் இரா.இரவி !

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்! கவிஞர் இரா.இரவி ! திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள் நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள் உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள் ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள் முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள் அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள் ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள் ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள் மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள் மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள் மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள் மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள் மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள் அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள் அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள் உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள் உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள் உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள் இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும் அன்பும் அறனும் அவசியம் வேண்டும் உயர்ந்த தவத்தை விட சிறந்தது ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம் பூ உலகில் செம்மையாக வாழ்பவன் வானுலக தேவர்களை விட சிறந்தவன் வாழ்வது எப்படி என்பதை அறிய வளமான திருக்குறளைப் படியுங்கள் பாடாத பொருள் இல்லை திருக்குறளில் சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில் 1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று !

கருத்துகள்