கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி

கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி கண் முன்னே பல மரணங்கள் நடந்தன கண்ணான மணியான மனிதர்கள் மறைந்தனர்! கண்ணுக்குத் தெரியாத கிருமி கொரோனா கண்ணில் விரல் விட்டு ஆட்டி வருகின்றது! முதல் அலை இரண்டாம் அலை என்று வந்தது மூன்றாம் அலையும் வரும் என்று அச்சுறுத்துகின்றனர்! அம்மை தடுப்பு ஊசி போட்டது போலவே அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிடுவோம்! தப்பிக்க தடுப்பூசி தவிர வேறு வழியில்லை தவறாமல் அனைவரும் போட்டுக் கொள்வோம்! விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து விட்டோம் வீணாக ஊர் சுற்றுவதைத் தடுத்து நிறுத்துவோம்! ஊரடங்கு சட்டத்தை மதித்து நடப்போம் ஊரே கட்டுப்பட்டு நடந்தால் ஒழிக்கலாம்! கைகளை கழுவுவதை வாடிக்கையாக்கிடுவோம் கால்களைக் கழுவி வீட்டின் உள்ளே செல்வோம்! சத்தான உணவுகளை உண்டு வாழ்வோம் சத்தற்ற சக்கை உணவுகளைத் தவிர்த்திடுவோம்! முகக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்வோம் முன்னின்று சமூக இடைவெளியைக் கடைபிடிப்போம்! தொற்று என்பது தொற்றிக் கொள்ளும் அறிவோம் தொற்று தொற்றாதிருக்க தூர இடைவெளி வேண்டும்! உலகை விட்டே ஒழித்திட வழி காண்போம் உலக மக்கள் யாவரும் விழிப்புணர்வு பெறுவோம்!

கருத்துகள்