கே.ஜீவபாரதி நினைவு - டைரக்டர் முக்தா வி.சீனிவாசன்

கே.ஜீவபாரதி நினைவு - டைரக்டர் முக்தா வி.சீனிவாசன் வறுமைப் பிடியில் சிக்கி இருந்த குடும் பத்தைக் காப்பாற்றும் நிமித்தம் 1948 டோடு என் அரசியல் வாழ்வு முடிந்தது. திரைப்படத் தொழிலில் நுழைந்தேன். அரசியல் தொடர்பை அடியோடு வெட்டிக் கொண்டேன். ஆனால் அண்ணன் ஜீவாவின் நட்பு மட்டும் நிலைத்து நின்றது. நான் முதன்முதலில் டைரக்ட் செய்து வெளிவந்த 'முதலாளி' என்ற படம் ஜனாதிபதி பரிசு பெற்றது. அந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக 1958 -ம் வருடம் டில்லி சென்றிருந் தேன். ஜன்பத் ஹோட்டலில் தங்கியி ருந்தேன். மாலையில் கெனாட் பிளேசில் ஒரு புத்தகக் கடையில் ஏதோ பத்திரிகை பார்த்துகொண்டு நின்றிருந்தார் அண்ணன் ஜீவா அவர்கள். கட்சிக் கூட்டம் சம்பந்தமாக வந்திருந்த அவரும், பிலிம் விழா சம்பந்தமாக சென்றிருந்த நானும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். பார்லிமெண்ட் கூட்டத்தைப் பார்க்க நான் விரும்பினேன். அதற்கு ஒரு எம்.பி.யினால் சிபார்சு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். எனது இந்த விருப்பத்தை அறிந்த அண்ணன், மறுநாள் வாசுதேவன் நாயர் என்ற கம்யூனிஸ்டு எம்.பி. மூல மாக அனுமதிச் சீட்டு வாங்கித் தருவ தாகக் கூறினார். அப்படியே மறுநாள் அவரைச் சந்திப்பதாகக் கூறிப் புறப் பட்டேன். அன்று இரவு 10 மணி இருக்கும். சாப் பிட்டுவிட்டு என் அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்தால் அண்ணன் நின்றார் அங்கு. "தம்பி! உன்னிடம் பேசிவிட்டு ஆபீஸ் போனேன்! நாளைக் காலையே ஊருக் குப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற் பட்டிருக்கிறது. எங்கே காலையில் நீ வந்து தேடிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புவாயோ என்று அஞ்சி,நேரே வாசுதேவன் நாயரிடம் போனேன். நீ பார்லிமெண்ட் கூட்டத்தைப் பார்ப்பதற் கான ஏற்பாட்டை செய்துவிட்டு வந்தி ருக்கிறேன். நீ காலையில் நாயரைச் சந்தித்தால் அவர் உன்னை அழைத் துச் செல்வார். இந்தத் தகவலைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந் தேன்" என்றார். நாடு போற்றும் ஒரு பெரிய அரசியல் தலைவன் வாழ்க்கையில் எந்தவித மான முக்கியத்துவத்தையும் அடை யாத என்னிடம் சொன்ன ஒரு சாதா ரணச் சொல்லை, சூழ்நிலையின் கார ணமாகக்கூட மாற்ற விரும்பாத பெரும் பண்பை அண்ணன் ஜீவாவிடம் கண் டேன். ( இலக்கியப் பேராசான் ஜீவா மறைந்த போது 'தாமரை' மாத இதழ் வெளியிட்ட ஜீவா சிறப்பு மலரில் இருந்து...)

கருத்துகள்