கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி

கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி முதல் அலையை விட இரண்டாம் அலை மூச்சுமுட்டி சாகடித்தது பலரை! மூன்றாம் அலை நான்காம் அலை வருமென முக்கியத் தகவலாக பயமுறுத்தி வருகின்றனர்! கொரோனா கொடிய அரக்கன் கண்முன்னே பல கொலைகள் நிகழ்த்தினான்! கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமி கண்ணில் விரல் விட்டு ஆட்டிப் படைத்தது நன்மை தீமை இரண்டும் நடந்தது நன்மை எவை, என்ன என்பதை அறிவோம் இயந்திரமென ஓடிக்கொண்டே இருந்தவர்களை இளைப்பாற வைத்து இல்லம் நிறுத்தியது குடும்பத்தோடு நேரம் செலவழிக்காத மனிதர்களை குடும்பத்தோடு கட்டாயமாக இருக்க வைத்தது கை குலுக்குவது அந்நிய நாட்டு வழக்கம் - வேண்டாம். கை கூப்பி வணங்குவதே சிறப்பு – வேண்டும் என உணர்த்தியது. தொற்று பரவாதிருக்க எச்சரிக்கையாக பலரை தொட்டுப் பேசுவதை தவிர்க்க வைத்தது வழக்கொழிந்து போன வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்தி நல்ல நூல்களை வாசிக்க வைத்தது இல்லத்தரசிகளுக்கு உதவிட ஆண்களை பழக்கியது இல்லத்தரசிகளின் இன்னலை உணர வைத்தது குழந்தைகளோடு பேசிப் பழகிட நேரம் கிடைத்தது குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிட வாய்ப்பும் கிடைத்தது பசியின் கொடுமையை உணவின் அருமையை பலருக்கும் உணர்த்தி அறிய வைத்தது நேரம் போதவில்லை என்ற மனிதர்களை நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது கூட்டம் கூடுவதை தடுத்து நிறுத்தியது கூட்டம் கும்பல் தொற்றுக்கு வழிவகுக்கும் என உணர்த்தியது தனி மனித இடைவெளி வேண்டும் என்பதை தனி மனிதர்கள் நன்கு உணர்ந்திட வைத்தது பெற்றோரை இழந்தனர் சில குழந்தைகள் பெற்றோரை பிரிந்தனர் சில குழந்தைகள் தினந்தோறும் மரணச் செய்தி தலைப்புச் செய்தியானது தினத்தாள்களில் மரணப்புள்ளி விபரங்கள் தந்தது எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது எங்கு சென்றும் துக்கம் விசாரிக்க முடியாமல் போனது இலட்சங்கள் செலவு செய்த போதும் மிச்சமாகவில்லை உயிர் பறித்துக் கொன்றது தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடந்தது அரசு மருத்துவமனைகளில் பல உயிர்கள் மீண்டன ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய தமிழ் மருத்துவமே பலரின் உயிர் காத்தது உயிர் பயத்தை ஒவ்வொருவருக்கும் காட்டியது ஓவ்வொரு நாளும் யுகமெனக் கழிந்தது சிறுதொழில் பெருதொழில் எல்லாம் முடங்கியது சிந்திக்க வழியின்றி சிந்தையை முடக்கியது மனிதாபிமான உதவிகள் பலர் புரிந்தனர் மனதை கல்லாக்கி இயந்திரமாகவும் சிலர் இருந்தனர் நகைகளை விற்று உணவு வழங்கி மகிழ்ந்தனர் நல்ல மகிழுந்தை அமரர் ஊர்தியாக்கி மகிழ்ந்தனர் மரிக்கவில்லை மனித நேயம் மெய்ப்பித்தனர் பலர் மனிதாபிமானத்தால் பல உயிர்கள் பிழைத்தன உதவி வாழ்வதே வாழ்வு உணர்த்தியது பலருக்கு உதவாதவர்களையும் உதவிட வைத்து மகிழ்ந்தது நானே பெரியவன் அகந்தையை அகற்றியது நானே பெரியவன் கிருமி நமக்கு உணர்த்தியது அஞ்சி அஞ்சி தினமும் செத்துப் பிழைத்தனர் அச்சத்தாலும் பலரது உயிர்கள் பிரிந்தன பாட்டி வைத்தியம் சிறப்பு என்பதை உணர்த்தியது பாட்டி சொன்ன மிளகு இஞ்சி பூண்டு உயிர் காத்தன தமிழர் உணவு முறையே சிறப்பு என்பதை தரணிக்கு உணர்த்தியது கொடிய கொரோனா!

கருத்துகள்