பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
ஓட்டம் !
தங்கம் வெள்ளி
பெற்றுத் தரும்
ஓட்டம் !
பயிற்சி எடுத்தால்
பதக்கம் கிட்டும்
ஓட்டம் !
மான் உயிருக்காக
புலி உணவுக்காக
ஓட்டம் !
காவலர் அசந்தால்
கைதி பிடிப்பான்
ஓட்டம் !
ஆற்றின் அழகு
தண்ணீரின் '
ஓட்டம் !
முன்பு எடுத்தனர் இப்போது
எடுக்கமுடியாது வென்றவர்
ஓட்டம் !
திருடனை விட விரைவாக
இருக்க வேண்டும் காவலர்
ஓட்டம் !
கண்களுக்குத் தெரியாமலே
நடக்கிறது குருதியின்
ஓட்டம் !
இளமையில் சரி
முதுமையில் வேண்டாம்
ஓட்டம் !
மோசடி செய்துவிட்டு
சாமியார்கள் எடுப்பது
ஓட்டம் !
வீட்டுக்குத் தெரியாமல் திருமணம்
புரிந்தோர் எடுப்பது
ஓட்டம் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக