சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி !

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி ! சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் ! உலகின் முதல் மொழி தமிழ் என்று உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் ! உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள் உன்னத தமிழ் மொழியில் ஏராளம் ! அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள் ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு ! தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள் அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் ! முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள் முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி ! ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை ! ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு ! உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி ! பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி ! பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி ! உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ் உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !

கருத்துகள்