திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி ! புலவர்களின் புலவர் கவிஞர்களின் கவிஞர் திருவள்ளுவர் ! உலகப்பொதுமறைப் படைத்த உலகப்பெரும் புலவர் திருவள்ளுவர் ! பெயரிலேயே திருவைப் பெற்ற திருவாளர் திருவள்ளுவர் ! அறநெறிப் போதிக்கும் அற்புத இலக்கியம் வடித்தவர் திருவள்ளுவர் ! அவ்வையின் உதவியால் அரங்கேற்றம் ஆனவர் திருவள்ளுவர் ! அழைத்ததும் ஓடிவரும் அன்பு மனைவியைப் பெற்றவர் திருவள்ளுவர் ! உலகில் அதிக மனிதர்கள் வாசித்த இலக்கியம் படைத்தவர் திருவள்ளுவர் ! ஈராயிரம் வயது கடந்தும் இளமையாக இருப்பவர் திருவள்ளுவர் ! மரபு அன்று என்றவர்களையும் ஏற்க வைத்தவர் திருவள்ளுவர் ! வாசுகியின் கணவர் வாசகர்களின் கண் அவர் திருவள்ளுவர் !

கருத்துகள்